/ தினமலர் டிவி
/ பொது
/ குன்றக்குடி கோயில் யானைக்கு என்ன ஆச்சு? | Kundrakudi Temple | Temple Elephant
குன்றக்குடி கோயில் யானைக்கு என்ன ஆச்சு? | Kundrakudi Temple | Temple Elephant
சிவகங்கை குன்றக்குடி சண்முகநாதர் கோயில் யானை சுப்புலட்சுமி. 1971ல் பக்தர் ஒருவரால் கோயிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டது. குட்டியாக கொண்டு வரப்பட்டதில் இருந்தே மிக சாதுவாக வளர்ந்தது. பக்தர்களிடமும், கோயில் பணியாளர்களிடமும் மிகுந்த பாசத்துடன் பழகி வந்தது. யானை சுப்புலட்சுமி ஓய்வெடுக்க கோயில் அருகிலேயே கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. தகர கொட்டகை என்பதால் வெயில் சூடு கீழே வரக்கூடாது என அடியில் ஓலை வேயப்பட்டிருந்தது. புதன்கிழமை இரவு யானை கொட்டகையில் திடீரென தீ பிடித்தது. தீயில் எரிந்த ஓலை கீற்றுகள் யானை மீது விழுந்தது.
செப் 12, 2024