உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கர்நாடகாவில் நெய் வாங்கி லட்டுகள் தயாரிப்பு Laddu Adulteration Issues | Tirupati Temple | Yagam

கர்நாடகாவில் நெய் வாங்கி லட்டுகள் தயாரிப்பு Laddu Adulteration Issues | Tirupati Temple | Yagam

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டு தயாரிப்பில் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக வெளியான லேப் ரிப்போர்ட்டால் நாடு முழுவதும் பெருமாள் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நெய்யில் கலப்படம் நடைபெற்றதாக சந்திரபாபு குற்றம்சாட்டியிருந்தார். புகாரை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், தோஷம் நீக்கும் சிறப்பு பூஜையை நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி தோஷ நிவாரண சாந்தி ஹோமம் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர் தலைமையில் நடந்தது. இதில் 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை