உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் உலக அரங்கில் லாகூர் முன்னிலை Lahore| Pakistan Air Pollution

காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் உலக அரங்கில் லாகூர் முன்னிலை Lahore| Pakistan Air Pollution

அறுவடைக்கு பிந்தைய பயிர் கழிவு எரிப்பு, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, மோசமான வானிலை உள்ளிட்ட பல காரணங்களால், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு நாளுக்கு நாள் மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது. பொதுவாக, AQI 50 - 100 வரை இருந்தால் அது மனிதர்கள் மூச்சு விடத் தகுந்ததாகவும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது எனவும் கூறப்படுகிறது. அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில் AQI அளவு 577 என்ற மிக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. குஜ்ரன்வாலா என்ற இடத்தில் இது 632 என்ற அளவை எட்டியதால், மக்கள் மூச்சு விடவே முடியாமல் திணறுகின்றனர். பல இடங்களில் தன்னார்வலர்கள் மக்களுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். பயிர்க் கழிவுகளை எரிக்கும் விவசாயிகள் மீது போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கரும்புகை கக்கும் வாகனங்களை ஓட்டிச் செல்வோரிடம் உடனுக்குடன் அபராதம் வசூலிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் லாகூரில் நிலவும் காற்றின் தரக்குறியீடு உலக அரங்கில் வேறெந்த நகரத்திலும் இல்லாத வகையில் மோசமான அளவில் உள்ளது.

நவ 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ