மோடியின் எளிமை வியந்து பார்த்த பெண்கள் | Maharashtra | PM Modi | Lakhpati Didi Sammelan
ஆரத்தி எடுத்த பெண்களுக்கு மோடி செய்த மரியாதை பெண்களை லட்சாதிபதிகளாக்கும் திட்டமான லட்சாதிபதி சகோதரி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு, உதவித்தொகையும் வங்கிக்கடனும் வழங்கப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலம் ஜல்காவில் நடந்த நிகழ்ச்சியில் லட்சாதிபதி சகோதரி திட்டத்தின் கீழ் தேர்வு பெற்ற பெண்களுக்கு உதவி தொகையை பிரதமர் மோடி வழங்கினார். விழாவுக்கு வந்த பிரதமர் மோடியை சில பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களை வணங்கிய மோடி, தட்டை வாங்கி அந்த பெண்களுக்கு ஆரத்தி எடுத்து மரியாதை செய்தார். பெண்களிடம் கனிவுடன் நடந்துகொண்ட பிரதமர் மோடியின் எளிமையை அனைவரும் வியந்து பாராட்டினார்கள்.