பீகார் தேர்தலில் லாலு குடும்பத்துக்கே பேரிடி | lalu prasad yadav | irctc hotel scam | bihar election
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ல், இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்து விட்டன. தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் வகுத்து வருகின்றன. இப்படியொரு பரபரப்பான சூழலில் ஆர்ஜேடி எனும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் வகையில் டில்லி சிறப்பு கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, 2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பதவி வகித்தார். அப்போது, ஜார்க்கண்டின் ராஞ்சி மற்றும் ஒடிசாவின் புரியில் உள்ள ஐஆர்சிடிசி எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் ஹோட்டல்களை பராமரிக்கும் ஒப்பந்தம், முறைகேடான வழியில் சுஜாதா ஹோட்டல் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இந்த ஒப்பந்தத்துக்கு பிரதிபலனாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், லாலு மனைவி ரப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வியின் நிறுவனத்துக்கு லஞ்சமாக கைமாறியது என்று சிபிஐ தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு டில்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தான் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதன் விவரம்: தன் பதவியை தவறாக பயன்படுத்தி ஒப்பந்தத்தில் முறைகேடுகள் செய்து, அதற்கு பிரதிபலனாக நிலங்களை லாலு வாங்கியிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில், அவரது குடும்பத்தினருக்கும் பங்கு இருப்பது தெளிவாக தெரிகிறது. எனவே லாலு மீது ஊழல், கிரிமினல் சதி மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிடுகிறது. அதேபோல் லாலுவின் மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி மீது சதி மற்றும் மோசடி பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிடுகிறோம். ஐஆர்சிடிசி ஊழல் தொடர்பான இந்த வழக்கு, வரும் 27ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #LaluPrasadYadav #IRCTCHotelScam #BiharElection #BiharPolitics #YadavFamily #CorruptionExposed #IndianPoliticians #LocalElections #RailwayScam #PoliticalScandals #Election2023 #IndianPolitics #BiharUpdates #JusticeForBihar #PoliticalNews #Accountability #ElectoralIntegrity #BiharVote #ScamAlert #PublicAwareness