உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிக்கிமில் கனமழையால் பாதிப்பு; டூரிஸ்ட்கள் வெளியேற்றம் Landslide | Army Camp | Sikkim |

சிக்கிமில் கனமழையால் பாதிப்பு; டூரிஸ்ட்கள் வெளியேற்றம் Landslide | Army Camp | Sikkim |

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாம், அருணாச்சலபிரதேசம், மிசோரம், திரிபுரா, மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 5,000க்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். வடக்கு சிக்கிமின் சாட்டன் பகுதியில் நேற்று மாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள ராணுவ முகாம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் சக ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் இணைந்து ஈடுபட்டனர். 3 ராணுவ வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 4 வீரர்கள் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர். மாயமான 6 வீரர்களை தேடும் பணி தொடர்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட சிக்கிமில் இருந்து சுற்றுலா பயணிகளை வெளியேற்றும் பணி இன்று காலை துவங்கியது. முதற்கட்டமாக வடக்கு சிக்கிமின் லாச்சுங் பகுதியில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, 18 வாகனங்கள் மூலம் லோயர் டிசோங்குவில் உள்ள பிடாங் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுவரை பெண்கள், குழந்தைகள் உள்பட 1,678 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.

ஜூன் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி