உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாட்டில் குவிந்த ஒட்டுமொத்த மீட்பு படை | Landslide | Wayanad | Kerala | Heavy rain

வயநாட்டில் குவிந்த ஒட்டுமொத்த மீட்பு படை | Landslide | Wayanad | Kerala | Heavy rain

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்வதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயநாடு சூரல் மலை பகுதியில் உள்ள அணை நிரம்பிய நிலையில் அணையின் நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இடைவிடாது கொட்டிய கனமழையால் சூரல்மலை பகுதியில் நேற்று காலை முதலே சில இடங்களில் லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெரும்பாலான கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை வரையிலான ஒரே ஒரு பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ