சேற்றில் மூழ்கி கிடக்கும் கார், டேங்கர் லாரி | Bengaluru-Mangaluru highway | Landslide
கர்நாடகாவிலும் நடந்த அதிர்ச்சி மண்ணில் புதைந்த வாகனங்கள் கேரளாவில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். கடும் சவால்களுக்கு இடையில் மீட்பு பணி நடக்கிறது. இந்த சூழலில் கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் நிலச்சரிவு ஏற்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணில் புதைந்தன. வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடக்கிறது. இதனால் பெங்களூரு - மஞ்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து போக்குவரத்துக்கும் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.