உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாடு கோர சம்பவத்தில் இரையான 2 தமிழர்கள் யார்? | Wayanad Landslide | Kerala Land slide

வயநாடு கோர சம்பவத்தில் இரையான 2 தமிழர்கள் யார்? | Wayanad Landslide | Kerala Land slide

சேற்றில் புதைந்த 2 தமிழர்கள் உடல் வயநாடு சரிவில் அடுத்தடுத்து ஷாக் கேரளாவின் வயநாடு சூரல்மலையில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வயநாடு மாவட்டத்தின் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடியில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியை இணைக்கும் ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி சவாலாக உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை, விமானப்படை, ராணுவம், உள்ளூர் மக்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து இரவிலும் மீட்பு பணிகள் நடக்கிறது. சேற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பலரது உடல் சிதைந்த நிலையில் உள்ளது. இதுவரை 2 தமிழர்கள் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. ஒருவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறையை சேர்ந்த காளிதாஸ். வயது 34. இவர் சூரமலை பகுதிக்கு கட்டட வேலைக்காக போயிருந்தார். வயநாட்டில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து பணி புரிந்தபோது மண்சரிவு சிக்கி இறந்துள்ளார்.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை