/ தினமலர் டிவி
/ பொது
/ காது கேளாத மாற்றுதிறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் சலவை மையம்! Laundry Business | Coimbatore
காது கேளாத மாற்றுதிறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் சலவை மையம்! Laundry Business | Coimbatore
கோவை சாய்பாபா காலனியில் காது கேளாதவர்கள் மட்டும் பணி செய்யும் சலவை சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. தன்னார்வலர் அமைப்புகளின் உதவியுடன் காது கேளாதோர் அறக்கட்டளையால் இது செயல்படுத்தப்படுகிறது. செவித்திறன் குறைபாடுடைய நபர்களால் மட்டுமே இந்த சலவை மையம் நிர்வகிக்கப்படுகிறது. காது கேளாதவர்களுக்கு நிறுவனங்களில் சரியான பணி வாய்ப்பு அமைவதில்லை. அவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கும் விதமாக இந்த சலவை மையம் துவங்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இதை விரிவுபடுத்த காது கேளாதோர் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
மே 06, 2025