போலீஸ்கிட்ட போறியா? கஞ்சா கும்பல் வெறியாட்டம் | Theni | Law College Student
தேனி மாவட்டம் கம்பம் அருகே அரசுப்பள்ளி வளாகத்தில் அமர்ந்து சிலர் மது, கஞ்சா போதை பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி போலீசில் புகார் கொடுத்தார். குற்றவாளிகளை போலீசார் கண்டித்து அனுப்பிவிட்டனர். புகார் சொன்ன மாணவியின் வீட்டுக்கு சென்ற போதை ஆசாமிகள் இரும்பு பக்கெட்டால் அவரது தலையில் தாக்கியுள்ளனர். ஆஸ்பிடலில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் மாணவி வீடியோ வெளியிட்டுள்ளார்.
மார் 08, 2025