அருப்புக்கோட்டையில் சம்பவம் திமுக கவுன்சிலரை தூக்கிய போலீஸ் lawyer attacked dmk councillor arreste
வக்கீல் மீது கொடூர தாக்குதல் திமுக கவுன்சிலருக்கு சிறை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாஸ்கரன்(38). வழக்கறிஞர். சில தினங்களுக்கு முன் பாஸ்கரன் அருப்புக்கோட்டை தபால் நிலையம் அருகே நேதாஜி சாலையோரத்தில் காரை பார்க் செய்துவிட்டு, போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 ஆசாமிகள் பாஸ்கரனை காருக்குள்ளேயே வைத்து கொடூரமாக தாக்கினர். பாஸ்கரன் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகளையும் பறித்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரன் காரில் இருந்து இறங்க முடியாத நிலையில் கிடந்தார். போலீசார் வந்து அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பாஸ்கரன் கொண்டு செல்லப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தினர். அருப்புக்கோட்டையை சேர்ந்த குண்டு பாண்டி, அன்பு கணேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோர்தான் தாக்கினார்கள் என வழக்கறிஞர் பாஸ்கர் வாக்குமூலம் அளித்தார். அருப்புக்கோட்டை நகராட்சி திமுக கவுன்சிலர் மணி முருகன் தூண்டுதலின் பேரில்தான் மூன்று பேரும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும் பாஸ்கரன் சொன்னார்.