உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல் - லெபனான் எல்லையை கண்காணிக்கும் இந்தியா Lebanon | Israel | War Conflict| Hezbollah| India

இஸ்ரேல் - லெபனான் எல்லையை கண்காணிக்கும் இந்தியா Lebanon | Israel | War Conflict| Hezbollah| India

லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்புலாக்கள், இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், லெபனானை நோக்கி இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தி வருகிறது. போர் மேகம் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஐநா அமைதிப்படையை சேர்ந்தோர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலில் இருந்து லெபனானை பிரிக்கும் புளூ லைனில் அமைதிப்படையினர் பணியாற்றி வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. லெபனானில் ஹெஸ்புலாக்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், புளூ லைன் ஏரியாவில் இருந்து ஐநா அமைதிப்படையினர் உடனடியாக விலக வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தினார். அமைதிப்படையினர் களத்தில் இருக்கும் நிலையில் அந்த பகுதிகளில் தாக்குதல் நடத்தக் கூடாது என ஐநா எச்சரித்தும் இஸ்ரேல் அதை கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில், ஐநா அமைதிப்படையில் பணியாற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த இரண்டு வீரர்கள் இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்ததால், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஐநா அமைதிப்படையினர் மற்றும் போரில் காயமடையும் மக்களுக்கு உதவ இந்தியா சார்பில் 33 டன் மருந்து பொருட்கள் லெபனானுக்கு அனுப்பப்படுகிறது.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை