உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிரடியில் இறங்கிய அமலாக்கத்துறை: முறைகேடு வழக்கில் நடவடிக்கை

அதிரடியில் இறங்கிய அமலாக்கத்துறை: முறைகேடு வழக்கில் நடவடிக்கை

அதிமுக ஆட்சியில் 2017ம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர்களை தேர்வு செய்ய TRB எனும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வுக்கு 1.33 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து 2017 நவம்பர் 7ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்த மதிப்பெண் 190 ஆக இருந்த நிலையில், ஏராளமானோர் 120க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருந்தனர். தமிழே தெரியாத வெளிமாநிலத்தைச் சேர்ந்த சிலரும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அப்போது வாரியத்தின் உறுப்பினர் செயலராக இருந்த உமா, சென்னை மாநகர போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் போது முறைகேடு நடந்தது தெரியவந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்காலிக ஊழியர்கள், இடைத்தரகர்கள் மற்றும் பணம் கொடுத்து குறுக்கு வழியில் வேலை பெற முயன்றவர்கள் என 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இடைத்தரகர்களாக செயல்பட்ட முக்கிய குற்றவாளிகளான சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பரமசிவம், சிட்லபாக்கத்தைச் சேர்ந்த நாதன் மற்றும் தாவூத் நாசர், ரகுபதி, சுரேஷ்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2021ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். Lecturer Recruitment Scam |Teacher Recruitment Board |Government Polytechnic College |ED Raid

ஜூன் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை