உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயம் காட்டும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை திட்டம்

பயம் காட்டும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை திட்டம்

திருப்பதியில் அலிபிரி டு செர்லோபள்ளி சாலையில், பைக்கில் ஒருவர் நேற்றிரவு சென்று கொண்டிருந்தார். அப்போது, வனப்பகுதியில் இருந்து ஓடி வந்த சிறுத்தை, பைக்கில் சென்றவர் மீது பாய்ந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக, சிறுத்தையின் பிடியில் சிக்காமல் அவர் தப்பினார். பைக்குக்கு பின்னால் சென்று கொண்டிருந்த காரின் கேமராவில் இந்த பகீர் காட்சி பதிவானது. கடந்த வாரமே, அலிபிரி- செர்லோ பள்ளி சாலையில் சிறுத்தை படுத்திருக்கும் வீடியோ வெளியான நிலையில், தற்போது, பைக்கில் சென்றவரை தாக்க முயன்றுள்ளது. அந்த சாலையில் தனியாக யாரும் செல்ல வேண்டாமென எச்சரித்த வனத்துறை, அந்த சிறுத்தையை பிடிக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !