உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிலச்சரிவில் ராணுவத்தின் மீட்பு பணி சிறுவனை ஈர்த்தது

நிலச்சரிவில் ராணுவத்தின் மீட்பு பணி சிறுவனை ஈர்த்தது

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சூரல்மலை முண்டக்கை கிராமங்கள் மண்ணோடு மண்ணானது. இதுவரை 361 பேர் இறந்துள்ளனர். மேலும் 200 பேர் காணாமல் போயுள்ளனர். 6வது நாளாக மீட்டு பணி நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்கள், காட்டுப்பகுதிகளில் தஞ்சம் அடைந்தவர்கள் என அனைவரையும் பெரும் போராட்டத்திற்கு பிறகு இந்திய ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். குறிப்பாக சூரல்மலை - முண்டக்கை கிராமத்திற்கு இடையே 190 அடியில் ராணுவத்தினர் தற்காலிக இரும்பு பாலத்தை விரைந்து கட்டியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்திய ராணுவத்தை பாராட்டி கேரளாவை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவன் ராயன் கடிதம் எழுதியுள்ளான். அந்த கடிதத்தில் “அன்புள்ள இந்திய ராணுவ வீர்ர்களே நிலச்சரிவால் நிலைகுலைந்து போன எங்களின் வயநாட்டில், பாதிக்கப்பட்ட மக்களை நீங்கள் மீட்கும் பணிகளை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் பசிக்கு வெறும் பிஸ்கட்டை மட்டும் சாப்பிட்டு விட்டு அந்த பாலத்தை நீங்கள் கட்டிய வீடியோ பார்த்தேன்.

ஆக 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ