மதுரை எல்ஐசி கிளை மேலாளர் இறந்த வழக்கில் சக பணியாளர் கைது! | Madurai || Lady Manager |Murder Case
மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் உள்ளது. இதன் இரண்டாவது தளத்தில் கடந்த டிசம்பர் 17ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த 55 வயதான கிளை மேலாளர் கல்யாணி நம்பி, தீயில் கருகி இறந்தார். தீ விபத்து நடந்தபோது அங்கிருந்த உதவி நிர்வாக அதிகாரி ராம் என்பவருக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டு தனியார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். தீ விபத்து நடந்த போது கல்யாணி நம்பி அவரது மகனுக்கு போனில் அழைத்து பதட்டத்துடன் பேசி உள்ளார். போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறிய நிலையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் தனது தாயாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கல்யாணி நம்பியின் மகன் லட்சுமி நாரயணன் திலகர்திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். திலகர்திடல் போலீசார் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் அலுவலகத்தின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். தீ விபத்து நடந்த போது அலுவலகத்தில் கல்யாணி நம்பி மற்றும் ராம் மட்டுமே இருந்துள்ளனர். இதனால் ராம் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. ஆஸ்பிடலில் சிகிச்சையில் இருந்த ராமிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.