லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு சிறை தண்டனை | Lingusamy | cheque dishonour case | film director
திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிர்வாக இயக்குநர்களான லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் 2016ல் பேஸ்மேன் பைனான்ஸ் இந்தியா நிறுவனத்திடம் 35 லட்சம் கடன் பெற்றனர். கடன் தொகையை திரும்ப செலுத்தாததால் வட்டியுடன் சேர்த்து 48 லட்சத்து 68 ஆயிரமாக உயர்ந்தது. கடன் தொகைக்காக அளித்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. பேஸ்மேன் பைனான்ஸ் இயக்குநர் ராகுல்குமார் சென்னை 19வது மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் லிங்குசாமி, சுபாஷ்க்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை மாஜிஸ்திரேட் பி.மகாலட்சுமி விசாரித்தார். இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். தவறினால் கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக லிங்குசாமி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #Lingusamy | #chequedishonourcase | #filmdirector | #directorLingusamy