/ தினமலர் டிவி
/ பொது
/ மணீஷுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த நிபந்தனைகள் என்ன? Liquor Policy Case|Manish Sisodia|Supreme Court
மணீஷுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த நிபந்தனைகள் என்ன? Liquor Policy Case|Manish Sisodia|Supreme Court
டெல்லி அரசின் மதுக்கொள்கை ஊழல் தொடர்பாக, அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கடந்தாண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். கலால்துறையையும் இவர்தான் கவனித்து வந்தார். டெல்லியில் மது விற்பனையை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவில் ஊழல் நடந்தது என்பது குற்றச்சாட்டு. தனியார் நிறுவனங்களுக்கு விதிகளை மீறி கோடிக்கணக்கில் சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு பிரதி பலனாக ஆம் ஆத்மிக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. அதில் சிபிஐயும் சேர்ந்து கொண்டது.
ஆக 09, 2024