உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா சொன்ன புதிய இலக்கு | Lok sabha speaker | Om birla | AI technology | St

லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா சொன்ன புதிய இலக்கு | Lok sabha speaker | Om birla | AI technology | St

மாநில சட்டசபைகளில் ஏஐ தொழில்நுட்பம்! டில்லியில் நடந்த காமன்வெல்த் பார்லிமென்ட் 2 நாள் கருத்தரங்கின் முடிவில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேசினார். நவம்பர் 3 முதல் 8 வரை, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், 67வது காமன்வெல்த் பார்லிமென்ட் கருத்தரங்கு நடைபெற உள்ளது. அதில், இந்தியா சார்பில் எப்படிப்பட்ட கருத்துக்களை முன்வைப்பது என்பது குறித்து அனைத்து மாநில சபாநாயகர்களுடனும் ஆலோசனை நடத்தினோம். அதில், மாற்று பாலினத்தவர்களின் பங்கேற்பு, ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல், அவமதிப்பு, அகதிகள் பிரச்னை உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. லோக்சபாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தொழில்நுட்ப சாதனம் மூலம் வாசித்தல் உள்ளிட்ட நவீன வசதிகள் பயன்பாட்டில் உள்ளன. பல மாநிலங்களை சேர்ந்த எம்.பிக்களின் உரைகள் அவரவர் தாய்மொழிகளிலேயே மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. லோக்சபாவை போலவே, அனைத்து மாநில சட்டசபைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்டு வர வேண்டும்.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ