உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஷில்பா தப்பி ஓடாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் Shilpa Shetty - Raj Kundra | Look Out Notice for S

ஷில்பா தப்பி ஓடாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் Shilpa Shetty - Raj Kundra | Look Out Notice for S

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி, இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடத்துள்ளார். மும்பையை சேர்ந்த ராஜ் குந்த்ராவை திருமணம் செய்துள்ள இவர், யோகா பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். ஷில்பாவும் அவர் கணவரும் தன்னிடம் 60 கோடி ரூபாய்க்கு மேல் கடன், முதலீடாக பெற்று தன்னை ஏமாற்றி விட்டதாக, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் கோதாரி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா இணைந்து தனியார் டிவி சேனல் நடத்துவதாக கூறினர். அந்நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக, என்னிடம் 2015ல் முதல் 2023 வரை 60 கோடி ரூபாய் பணம் பெற்றனர். அந்த தொகையை கடனாக பெறுவதாகவும், ஆண்டுக்கு 12 சதவீத வட்டி கணக்கிட்டு, குறிப்பிட்ட நாட்களில் அசல், வட்டியை திருப்பி செலுத்துவதாகவும் ஷில்பா ஷெட்டி உறுதி அளித்தார். ஆனால் அவர் சொன்னபடி பணத்தை திருப்பி செலுத்தவில்லை. அது குறித்து நான் கேட்டதும், அந்த கடனை என் சார்பில் முதலீடாக எடுத்துக்கொள்வதாக கூறினார். என்னையும் பிசினஸ் பார்ட்னர் ஆக்குவதாக கணவன் - மனைவி இருவரும் கூறினர். ஆனால், அந்த நிறுவனம் திவால் ஆனதும், அதன் மீது வழக்கு நிலுவையில் உள்ளதும் சில நாட்களுக்கு பின் தான் தெரிந்தது. ஷில்பாவும், குந்த்ராவும் என்னை ஏமாற்றி விட்டனர். என்னிடம், 60 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளனர் என தீபக் கோதாரி தன் புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள மும்பை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஷில்பாவும், அவரது கணவர் குந்த்ராவும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதால், அவர்கள் தலைமறைவாகிவிடக்கூடாது என்பதற்காக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அவர்களின் பயண விவரங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷில்பா - குந்த்ராவின் நிறுவன ஆடிட்டரிடமும் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். #LookOutNoticeforShilpaShetty #ShilpaShetty| #RajKundra| #Rs60CroreScame| MumbaiPoliceAction| #ActressShilpa|

செப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி