கார் விபத்தில் தப்பிய காதலனுக்கு பிறந்தநாளில் சோகம் | Love problem | Boy attacked
மகளின் காதலுக்கு எதிர்ப்பு தந்தை செய்த கொடூரம் காதலனுக்கு அதிர்ச்சி முடிவு தெலங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டம் முப்பிரிடோட்டா கிராமத்தை சேர்ந்தவர் சாய்குமார். வயது 17 அதே கிராமத்தை சேர்ந்த 17 வயதை பெண்ணும் சாய்குமாரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சாய்குமார் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த பெண்ணின் தந்தை முத்யம் சதத்தையா இருவரையும் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் அவர்கள் தங்கள் காதலை கைவிட மறுத்து தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முத்யம் சதத்தையா, சாய்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். நேற்று தனது பிறந்தநாளை கொண்டாட சாய்குமார் அவரது நண்பர்களுடன் ஒன்று கூடிய நேரத்தில், மறைந்திருந்த சிறுமியின் தந்தை, கோடரியால் சாய்குமாரை தாக்கிவிட்டு தப்பினார். படுகாயமடைந்த சாய் குமாரை அவரது நண்பர்களும் உறவினர்களும் சுல்தானாபாத் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சாய்குமார் இறந்தார். மருத்துவமனையில் திரண்டிருந்த குடும்பத்தினர், உறவினர்கள் தகவல் அறிந்து கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் கிராமத்தில் இரு சமூக மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கொலை தொடர்பாக வழக்கு பதிந்த பெத்தப்பள்ளி போலீசார், சீமலபேட்டையில் பதுங்கி இருந்த சதய்யாவை கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்புதான் சாய்குமார் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அப்போது காரில் உள்ள பலூன்கள் திறந்ததால் அவர் உயிர் தப்பினார். கார் விபத்தில் தப்பிய தங்கள் நண்பன் காதலித்த பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை என சாய்குமார் நண்பர்கள் ஆதங்கப்படுகின்றனர். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.