/ தினமலர் டிவி
/ பொது
/ வங்கக்கடலில் மீண்டும் உருவாகியது காற்றழுத்த தாழ்வு! | IMD predicts | low-pressure area Formed
வங்கக்கடலில் மீண்டும் உருவாகியது காற்றழுத்த தாழ்வு! | IMD predicts | low-pressure area Formed
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு சுழற்சி நிலவியது. இதன் எதிரொலியாக இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். டிசம்பர் 11ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை, தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
டிச 07, 2024