/ தினமலர் டிவி
/ பொது
/ டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் | LPG Gas truck strike | Strike call off
டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் | LPG Gas truck strike | Strike call off
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் டெண்டர் பெற்று கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் 2025 முதல் 2030ம் ஆண்டுகளுக்கான டெண்டரில் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் சிலவற்றை லாரி உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். நிபந்தனைகளை வாபஸ் கோரி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தமும் தொடங்கினர். இதனால் தென் மாநிலங்களில் அமைந்துள்ள பாட்டிலிங் நிலையங்களுக்கு சமையல் கேஸ் லோடு கொண்டு செல்லும் பணி 4 நாட்களாக தடைபட்டது.
மார் 30, 2025