அமெரிக்காவுக்கு அவங்க ஸ்டைல்ல பதிலடி: இந்தியாவின் சாமர்த்தியம் | LPG Import | Central Government
இந்தியாவில் உள்ள மொத்த குடும்பங்களில் 60 சதவீதம் பேர், சமையலுக்கு எல்.பி.ஜி., சிலிண்டரை பயன் படுத்துகின்றனர். நாம் எல்.பி.ஜி.,க்காக மேற்கு ஆசிய நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளை பெரிதும் நம்பியிருக்கிறோம். உலகின் மிகப்பெரிய எல்.பி.ஜி., உற்பத்தியாளராக அமெரிக்கா இருந்தாலும், நம் இறக்குமதியில் 90 சதவீதம் சவுதி உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் வருகிறது. காரணம், வளைகுடா நாடுகள் பெரும்பாலும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எல்.பி.ஜி.,யை உற்பத்தி செய்கின்றன. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது, இயல்பாகவே பியூட்டேன் நிறைந்த எல்.பி.ஜி எஞ்சிய பொருளாகக் கிடைக்கும். வளைகுடா நாடுகள் இந்தியாவுக்கு மிக அருகில் இருப்பதால், சரக்கு போக்குவரத்து செலவு மிகக் குறைவு என நாம் அங்கிருந்து இறக்குமதி செய்தோம். இதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து ஆண்டுக்கு 22 லட்சம் டன் எல்.பி.ஜி., இறக்குமதி செய்ய, நாட்டின் மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் சமீபத்தில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முன்னிலையில் கையெழுத்தானது. இது, நம் நாட்டின் ஓராண்டுக்கான எல்.பி.ஜி., இறக்குமதியில், 10 சதவீதமாகும்.