/ தினமலர் டிவி
/ பொது
/ லோக்சபாவில் இருந்த பிரதிநிதித்துவம் போச்சு | L.S election 2024 | ADMK |Edappadi Palanisamy
லோக்சபாவில் இருந்த பிரதிநிதித்துவம் போச்சு | L.S election 2024 | ADMK |Edappadi Palanisamy
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளான புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ தலா ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டன. மற்ற 5 தொகுதிகளில் கூட்டணி கட்சியான தே.மு.தி.க முரசு சின்னத்தில் போட்டியிட்டது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களும் தோல்வி அடைந்துள்ளனர். 2019 லோக்சபா தேர்தலில், அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று ஒரே ஒரு எம்.பி.,யாக இருந்தார்.
ஜூன் 05, 2024