டிரம்பால் ரோட்டுக்கு வந்த பிரான்ஸ் அதிபர்-வீடியோ macron viral video | macron trump new york video
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டம் கூடியது. இதில் பேசுவதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நியூயார்க் சென்றார். ஐநா சபை கூட்டத்தில் பேசிய பிறகு, நியூயார்க் நகரில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு ஓய்வெடுக்க புறப்பட்டார். அவரது காரும், பின்னால் பிரான்ஸ் அதிகாரிகள் காரும் நியூயார்க் நகரில் சென்று கொண்டு இருந்தன. அப்போது திடீரென போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. ஆங்காங்கே வந்த அனைத்து கார்களும், வாகனங்களும் தடுக்கப்பட்டன. பிரான்ஸ் அதிபர் காரும் நிறுத்தப்பட்டது. இதனால் அவரும் பிரான்ஸ் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பிரான்ஸ் அதிபர் காரில் காத்திருப்பதற்கு பதில், இறங்கி வெளியே வந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரியிடம் எதற்காக வாகனங்களை நிறுத்தி வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டார். பிரான்ஸ் அதிபர் என்பதை தெரிந்து வைத்திருந்த போலீஸ் அதிகாரி, ‛சாரி பிரசிடென்ட், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த வழியாக செல்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன என்றார். தனது காரை நிறுத்தியது பற்றி சற்றும் அலட்டிக்கொள்ளாத பிரான்ஸ் அதிபர், திடீரென தெருவில் நடக்க ஆரம்பித்தார். அவருடன் பாதுகாப்புக்கு யாரும் இல்லை. எதை பற்றியும் அவர் கவலைப்படவில்லை. போனை எடுத்தார். டிரம்புக்கு டயல் செய்தார். ‛எப்படி இருக்கீங்க. என்ன நடக்குனு கொஞ்சம் கெஸ் பண்ணுங்க பார்க்கலாம் என்று டிரம்பிடம் புதிர் போட்ட மேக்ரான், பின்னர் ‛நீங்கள் சாலையை கடந்து செல்வதற்காக எல்லாவற்றையும் தடுத்து நிறுத்தி விட்டார்கள். நான் இப்போது நடுரோட்டில் நிற்கிறேன் என்று ஜாலியாக சொல்லி விட்டு போனை வைத்தார். தொடர்ந்து ஜாலியாக நியூயார்க் வீதியில் நடையை போட்டார். வந்திருப்பது பிரான்ஸ் அதிபர் என்பதை தெரிந்து கொண்ட மக்கள், ஆர்வமுடன் வந்து பேசினர். பலரும் அவருடன் செல்பி எடுத்தனர். சிலர் மேக்ரானை கட்டி தழுவி முத்தமிட்டனர். அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். யாரையும் தடுக்கவில்லை. பிரான்ஸ் அதிபரின் இந்த செயல் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தீயென பரவி வருகிறது. இவ்வளவு சம்பவமும் நடக்கும் முன்பு, ஐநா சபையில் பேசிய மேக்ரான், இஸ்ரேலுக்கு எதிராக நின்றார். பிரிட்டன், கனடாவை போல் தாங்களும் பாலஸ்தீன் என்ற சுதந்திர நாடு உருவாவதை ஆதரிப்பதாக அறிவித்தார். இது அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டுக்கு எதிரானது. இவ்வளவும் நடந்த பிறகு தான், அவர் சாதாரணமாக நியூயார்க் வீதியில் இறங்கி உலா வந்தார். எந்த பாதுகாப்பு அதிகாரியையும் உடன் வைத்துக்கொள்ளவில்லை. ‛மனுஷன் எவ்ளோ எளிமையாக இருக்காருயா என்று அமெரிக்கர்களே புகழ்ந்து தள்ளினர். #Macron #Trump #USPresident #Convoy #EverythingClosed #PoliticalNews #DiplomaticRelations #WorldLeaders #CurrentEvents #BreakingNews #GlobalPolitics #InternationalRelations #PoliticalInsider #NewsUpdate #LeaderTalks #GovernmentShutdown #Intervention #MediaCoverage #PolicyDebate