உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய பிரதேசத்தில் பொது சிவில் சட்டம்: எதற்கெல்லாம் தண்டனை? | Madhya Pradesh UCC Bill | Uniform Civ

மத்திய பிரதேசத்தில் பொது சிவில் சட்டம்: எதற்கெல்லாம் தண்டனை? | Madhya Pradesh UCC Bill | Uniform Civ

மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்கியது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுசிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என கூறப்பட்டது. தற்போது இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசு உரிமை போன்ற தனிநபர் சார்ந்த விவகாரங்கள் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளன. இந்து திருமணச் சட்டம், முஸ்லிம் தனிநபர் சட்டம் போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். பொது சிவில் சட்டம் என்பது, மத பாகுபாடின்றி நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்ட விதியை நடைமுறைப்படுத்துவதாகும். இந்திய அரசியல் அமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகள் பிரிவு 44ன் கீழ், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர அரசு முயல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, திருமணம் செய்த தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகள், தத்தெடுக்கப்படும் குழந்தைகள், வாடகைத்தாய் மூலம் பிறக்கும் குழந்தைகள் என அனைவருக்கும் சம அளவு சட்ட உரிமை வழங்க பரிந்துரை செய்யும் பொது சிவில் சட்ட வரைவு மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மத்திய பிரதேச சட்ட சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. #UniformCivilCode #UCCBill #MadhyaPradesh #MohanYadav #MPNews #BreakingNewsIndia #UCCPassed #LiveInRelationship #TripleTalaq #IndiaPolitics #LegalNews #CivilCode #MPAssembly #NationalNews #BJPMP

ஜூலை 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை