முகாந்திரம் இல்லை! தடைவிதிக்க முடியாது! - ஐகோர்ட் | MadrasHC | Mahasivarathri | Isha Foundation
ஈஷா யோகா மையம் நடத்தும் மகாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சிவஞானன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிகழ்ச்சியால் வெள்ளியங்கிரி வனச்சூழல் பாதிப்படைகிறது. 7 லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடியதால் வெளியாகிய கழிவு நீர் வனப்பகுதிகளை மட்டுமல்லாமல் அருகில் உள்ள விவசாய நிலங்களையும் மாசுப்படுத்தியது. அதிமான சத்தத்துடன் வனப்பகுதியில் நிகழ்ச்சி நடத்தப்படுவது விதிகள் மீறிய செயல் எனவும் கூறி இருந்தார். நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ராஜசேகர் அடங்கிய அமர்வு, வழக்கை விசாரித்தது. விதிமுறைகளை பின்பற்றி விழா நடத்தப்படுகிறதா என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆராய்ந்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் தலைமை வக்கீல் ஜெ.ரவீந்திரன் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார்.