ஜனநாயக விரோத உத்தரவு: கொடி பிடிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி madras high court party flag poles
யார் எவ்வளவு உயரத்தில் கொடிக் கம்பங்கள் வைப்பது என கட்சிகள் போட்டி போட்டு சாலைகள் தெருக்களில் வைத்துள்ள கொடி கம்பங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கட்சிக் கொடி கம்பங்களை 12 வாரங்களில் அரசு அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்தும்விதமாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பி. ரமேஷ் பேசுகையில், கட்சி கொடி கம்பங்களை அகற்றுவது ஜனநாயக விரோதமானது என்றார். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு வரும் வரை மார்க்சிஸ்ட் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற மாட்டோம் என கூறி, கலெக்டர் கிரேசிடம் கோரிக்கை மனுவையும் ரமேஷ் அளித்தார்.