நாகேந்திரன் மனைவி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு madras high court rowdy nagendran dies
பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் வடசென்னையின் பிரபல தாதா நாகேந்திரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். வேறொரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரனை ஆம்ஸ்ட்ராங் வழக்கிலும் கைது செய்தனர். இருவருக்கும் நிலப்பிரச்னை, கட்டப்பஞ்சாயத்தில் மோதல் இருந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த நாகேந்திரனுக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலைமை மோசமானதை தொடர்ந்து சென்னை அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வந்த நிலையில் நேற்று காலை நாகேந்திரன் மரணமடைந்தார். #MadrasHighCourt #RowdyNagendran #ChennaiNews #StanleyGovernmentHospital #AmstrongCase #Aswathaman #Visalatchi #LegalDrama #CourtCase #TamilNadu #BreakingNews #CrimeNews #JudicialSystem #IndianLaw #ChennaiUpdates #HighCourt #Rowdyism #JusticeForAll #TrueCrime #LegalBattle #CourtroomDrama #TamilNaduNews #CurrentEvents #NewsUpdate #ChennaiCrime #PublicInterest #SocialJustice #LegalAwareness