பிரசவத்துக்காக அட்மிட் ஆன மனைவியை பார்க்க சென்ற போது சோகம்| Madurai|Car Accident|Melur Car Clash
சென்னை வாடிபாக்கத்தை சேர்ந்தவர் கனகராஜ் நேற்று இரவு குடும்பத்துடன் கோவில்பட்டிக்கு காரில் புறப்பட்டார். மகன் ஸ்ரீராம் காரை ஓட்டினார் இன்று காலை 6.30 மணி அளவில் கார் மதுரை மேலூர் அருகே வந்து கொண்டிருந்தது. பாலத்தின் மீது சென்றபோது திடீரென ஒரு பைக் குறுக்கே வந்துள்ளது. அதில் உரசி நிலை தடுமாறிய கார் சென்டர் மீடியனை தாண்டி எதிர்திசையில் சென்ற கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் இரு கார்களும் பலத்த சேதமடைந்தன. காரில் பயணம் செய்த கனகராஜின் மகன் ஸ்ரீராம் வயது 28, ஸ்ரீராம் மனைவி ரஞ்சனா 25, இவர்களது ஒன்றரை வயது குழந்தை பிரணிதா, கனகராஜ் மனைவி ராஜகுமாரி, ஸ்ரீராம் அண்ணன் பாலாஜி ஆகிய 5 பேர் நிகழ்வு இடத்திலேயே இறந்தனர். எதிர் திசையில் வந்த கார் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தது.