/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரையில் பகீர் சம்பவம்: 10 பஸ் பயணிகள் காயம் Madurai bus accident break failure madurai bus stand
மதுரையில் பகீர் சம்பவம்: 10 பஸ் பயணிகள் காயம் Madurai bus accident break failure madurai bus stand
மதுரை அருகே உள்ள வடபழஞ்சியில் இருந்து மதுரை பஸ் நிலையத்துக்கு ஒரு அரசு பஸ் இன்று காலை சென்று கொண்டிருந்தது. 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மதுரை பஸ் நிலையம் அருகே உள்ள எல்லிஸ் நகர் மேம்பாலத்தில் பஸ் சென்றபோது, டிரைவர் பிரேக் போட்டு பார்த்தார். பிரேக் பிடிக்கவில்லை. பாலத்தில் இருந்து வேகமாக இறங்கிய பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த நான்கு ஆட்டோக்களை அடுத்தடுத்து இடித்து தள்ளியது.
நவ 19, 2024