உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோர்ட் தலையீட்டால் மதுரை துணை மேயர் மீது பாய்ந்தது வழக்கு | Deputy mayor Nagarajan | Madurai | Thre

கோர்ட் தலையீட்டால் மதுரை துணை மேயர் மீது பாய்ந்தது வழக்கு | Deputy mayor Nagarajan | Madurai | Thre

மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வசந்தா, வயது 62. இவருக்கு ஒரு ஆண், 5 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். மகன் முருகானந்தம் வீட்டின் அருகிலயே சலூன் கடை வைத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த கோழிக்குமார் என்பவரிடம் வசந்தா தனது வீட்டை அடமானமாக வைத்து 10 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். சமீபத்தில் மீண்டும் கோழிகுமாரை சந்தித்த வசந்தா, கடனை திருப்பி கொடுத்து விடுவதாகவும், வீடு அடமான கடன் பத்திரத்தை ரத்து செய்து கொடுக்குமாறும் கேட்டுள்ளார் ஆனால் கோழிகுமார் 15 லட்சம் ரூபாய் தருகிறேன் வீட்டை முழுவதுமாக கிரயம் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். வசந்தா மறுத்ததால் கோழிகுமார் தனது ஆட்களுடன் வந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. தனது வீட்டை எழுதிகேட்டு தாக்கி மிரட்டியதாக கோழிக்குமார், வாய் கணேசன், புரோக்கர் முத்து ஆகிய 3 பேர் மீது ஜெய்ஹிந்த்புரம் போலீசில் மே 7ல் வசந்தா புகார் அளித்தார். வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கோர்ட்டில் நடக்கும் நிலையில், ஜூலை 30ல் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன், புரோக்கர் முத்து ஆகியோர் வசந்தா வீட்டுக்கு சென்றுள்ளனர். கோழிகுமாருக்கு ஆதரவாக பேசி வீட்டை கொடுத்து விடுமாறும், வழக்கில் சாட்சி சொல்ல கூடாது என கூறியும் கற்களால் தாக்க முயன்று, சாதிய ரீதியில் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூதாட்டி வசந்தா, அவரது மகன் முருகானந்தம் இருவரும் ஆகஸ்ட் 5ல் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தனர்.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை