முதல் முறை குற்றவாளிகளுக்கு தனி சிறை; ஐகோர்ட் யோசனை | Separate jail for first time prisoners | Madu
ரவுடிங்க கூட சேர்ந்து ஜெயில்ல தான் கத்துக்கிறாங்க! நீதிபதி அதிர்ச்சி ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன், முன்ஜாமீன் கோரும் மனுக்களை நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரிக்கிறார். வியாழனன்றும் வழக்கம் போல் ஜாமின் மனுக்களை விசாரித்தார். அப்போது கடந்த மாதம் ஜாமினில் வெளியே சென்ற சில இளைஞர்கள், கஞ்சா வழக்கில் மீண்டும் கைதாகி ஜாமின் மனு செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இவர்களுக்கு கடந்த மாதம் தான் ஜாமின் தரப்பட்டது.. ஏன் மீண்டும் கைதாகியுள்ளனர்? என கேட்டார். சிறையில் கஞ்சா வழக்கில் கைதானவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு குற்றச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிந்ததாக போலீசார் விளக்கம் அளித்தனர். மத்திய சிறையில் முதல்முறை சிறைக்கு வருபவர்கள் தனியாக வைக்கப்படுகிறார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு சிறைத்துறை துணை தலைவர் பழனி, மதுரை மத்திய சிறையை பொறுத்தவரை தண்டனை கைதிகள், தனியாகவும் விசாரணை கைதிகள் தனியாகவும் அடைக்கப்படுகிறார்கள். இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சிறை கைதிகளை ஒன்றாக வைக்கும்போது புதிதாக வருபவர்கள், பழைய கைதிகளுடன் இணைந்து தொடர் குற்றவாளிகளாக மாறிவிடுகிறார்கள்.