உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தனி நீதிபதி அளித்த அனுமதி ரத்து ஐகோர்ட் கிளை பரபரப்பு தீர்ப்பு

தனி நீதிபதி அளித்த அனுமதி ரத்து ஐகோர்ட் கிளை பரபரப்பு தீர்ப்பு

கரூரில் மண்மங்கலம் தாலுகா, நெரூரில் உள்ள சதாசிவ பிரம்மேந்திராள் கோயிலில், ஜீவ சமாதி தினத்தில் அன்னதானம் வழங்கப்படும். அந்த எச்சில் இலை மீது பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள். இந்த நடைமுறைக்கு 2015ல் சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் கரூரை சேர்ந்த நவீன் என்பவர் மனு செய்தார். அங்கப்பிரதட்சணம் செய்வது அவரவர் உரிமை. இதை தடை செய்வது வழிபாட்டு உரிமையை மீறுவதாகும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி கடந்தாண்டு மே 17 ல் தீர்ப்பளித்தார். அடுத்த நாள் நடந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். இந்த உத்தரவை எதிர்த்து, கரூர் கலெக்டர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. திருவண்ணாமலையை சேர்ந்த அர்ச்சகர் அரங்கநாதனும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது வழிபாட்டு முறையாக சொன்னாலும், அது சுகாதாரத்துக்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல.

மார் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை