பதட்டத்துடன் பள்ளி முன் குவிந்த பெற்றோர் madurai schools bomb threat
துரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நரிமேடு கேந்திர வித்யாலயா, பொன்மேனியில் ஜீவனா ஸ்கூல் மற்றும் சிந்தாமணியில் வேலம்மாள் போதி காம்பஸ் ஆகிய பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிகளின் ஒவ்வொரு இடத்தையும் சோதனை செய்தனர். இதை அறிந்த பெற்றோர் பதட்டத்துடன் பள்ளி முன்பு குவிந்தனர். ஆனால், எந்த பள்ளியிலும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது.
செப் 30, 2024