உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீபாவளி வைப்: ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுப்பு | Madurai traffic congestion | Diwali festival rus

தீபாவளி வைப்: ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுப்பு | Madurai traffic congestion | Diwali festival rus

தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். அரசு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கினாலும் பஸ் ஸ்டாண்ட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பஸ், ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் வாடகை வாகனங்களிலும் பயணிக்கின்றனர். மதுரையில் இப்போதே ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெளியூரை நோக்கி புறப்பட ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக எம்.ஜி.ஆர் பஸ் ஸ்டாண்ட், மாட்டுத்தாவணி - பாண்டி கோயில், கோரிப்பாளையம் - சிம்மக்கல், தெற்கு வாசல் மாநகர வழி ரோடு பகுதிகளில் அதிக நெரிசல் உண்டானது. 5 கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மதுரை -மேலூர் ரோட்டில் நீண்ட வரிசையில் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள், பஸ் ஸ்டண்ட்டுக்குள் திரும்ப முடியாமல் சிரமப்பட்டன. #MaduraiTrafficJam #DiwaliRush #DeepavaliCongestion #5kmQueue #TamilNaduTravel #FestivalTraffic #HomecomingChaos #DriverStruggle #MaduraiNews #Diwali2025

அக் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ