உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளைஞனை விரட்டி சென்று தீர்த்து கட்டிய கும்பல் | Madurai Police Crime Instagram status

இளைஞனை விரட்டி சென்று தீர்த்து கட்டிய கும்பல் | Madurai Police Crime Instagram status

இன்ஸ்டால சவால் விடுறியா..? இளைஞனை தீர்த்து கட்டிய கேங் மதுரையில் சம்பவம் மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் சூர்யா(23). அப்பா துவங்கிய டீக்கடையை கவனித்து வந்தார். சூர்யா கடைக்கு அவரது நண்பர்கள் வருவார்கள். அவர்கள் ஏழெட்டு பேர் ஒரு கேங் ஆக ஏரியாவில் வலம் வருவது வழக்கம். அதே பகுதியில் இளைஞர் பிரவீன்ராஜா தலைமையில் இன்னொரு கேங்கும் சுற்றி வந்தது. சூர்யாவுக்கும், பிரவீன் ராஜாவுக்கும் யார் பெரிய ஆள் என்பதில் அடிக்கடி முட்டல் மோதல் இருந்து வந்துள்ளது. சில நேரங்களில் இரு தரப்பும் அடிதடி சண்டையில் இறங்குவதும் வழக்கம். கடந்த 3 மாதமாக Instagram ல் இருவரும் மோதிக் கொண்டனர். யாரு பெரிய ஆள்னு பார்க்கலாமா? விரைவில் சந்திப்போம் என மாறி மாறி பதிவுகளையும் ரீல்ஸ்களையும் போட்டு வந்தனர். சண்டை முற்றிய நிலையில், கடந்த 23 ஆம் தேதி ஜீவாநகர் 1வது தெருவில் நின்றிருந்த சூர்யாவிடம் பிரவீன்ராஜா மற்றும் அவரது நண்பர்கள் தகராறு செய்தனர். Instagram ல எங்களுக்கு சவால் விடுத்து ஸ்டேடட்ஸ் போடுவியா எவ்ளோ திமிரு உனக்கு என சொன்னபடி, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சூர்யா கையில் வெட்டியுள்ளனர்.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி