தமுக்கம் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டும் புத்தக திருவிழா! Book Fair | Madurai | Thamukkam
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா கோலாகலமாக துவங்கியது. இதை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். கலெக்டர் பிரவீன் குமார், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த புத்தக திருவிழா வரும் 15ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும் புத்தக கண்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏசி அரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைத்துள்ளனர். இந்த புத்தக திருவிழாவில் பிரத்யேக குழந்தைகள் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு முப்பரிமாண வடிவில் சூரிய குடும்பம் பற்றிய 15 நிமிட குறும்படம் ஒளிபரப்பப்படுகிறது. கண்காட்சியில் சிறார் கதைகள், அறிவியல், வரலாறு, இலக்கியம் மற்றும் ஆங்கில எழுத்தாளர்களின் மொழி பெயர்ப்பு புத்தகம், அரசியல் தலைவர்களின் வரலாறு, ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.