உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போனில் அழைத்து கதையை முடித்த மர்ம கும்பல் | Madurai Police | Investigation

போனில் அழைத்து கதையை முடித்த மர்ம கும்பல் | Madurai Police | Investigation

மதுரை மாவட்டம் மேல கள்ளந்திரி பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி, வயது 23. கூலித்தொழில் செய்து வந்துள்ளார் நேற்று இரவு வீட்டில் இருந்த செல்லப்பாண்டியை சிலர் சந்திக்க வருமாறு போனில் அழைத்துள்ளனர். அவர்கள் வர சொன்ன அழகர்கோவில் சாலைக்கு செல்லப்பாண்டி சென்றுள்ளார். அப்போது செல்லபாண்டியை நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தியுடன் ஓட ஓட விரட்டியுள்ளது. உயிரை காப்பாற்ற அங்குள்ள மளிகை கடைக்குள் அடைக்கலம் புகுந்துள்ளார். அங்கே சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு கும்பல் தப்பி சென்றது. சம்பவ இடத்திற்கு வந்த அப்பன்திருப்பதி போலீசார் செல்லப்பாண்டியின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை கைது செய்தால் மட்டும் தான் உடலை வாங்குவோம் என செல்லப்பாண்டியின் உறவினர்கள் கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இரவு செல்லப்பாண்டியை போனில் அழைத்த நபர் குறித்தும் விசாரிக்கின்றனர். முதல் கட்ட விசாரணையில் செல்லப்பாண்டிக்கு, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாக தெரிகிறது. 5 மாதங்களுக்கு முன் செல்லப்பாண்டி ஆட்டோ வாங்க சிலரிடம் பணம் கொடுத்துள்ளார். பணம் வாங்கிய நபர்கள் ஆட்டோ வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திரும்பி தராமல் இருந்துள்ளனர். 10 நாட்களுக்கு முன் செல்லப்பாண்டி தனது தாயாரிடம் சிலர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் கூறியிருக்கிறார். கொலைக்கான பின்னணி குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ