உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2 ஆண்டுகளாக உபி பெண்ணுக்கு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை | Magalir Urimai Thogai

2 ஆண்டுகளாக உபி பெண்ணுக்கு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை | Magalir Urimai Thogai

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என, 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, 2023 செப்டம்பர் முதல், இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ், தற்போது 1.20 கோடி மகளிர் பயன் பெற்று வருகின்றனர். மகளிர் உரிமைத்தொகை பெற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், விண்ணப்பித்த பலரும் நிராகரிக்கப்பட்டனர். இதனால் பெண்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்தது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிருப்தியில் உள்ள மகளிரை திருப்திப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கோவை கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஜூலை 25ல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. கிணத்துக்கடவு கொண்டம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பம் கொடுத்தும் இதுவரை பதில் இல்லை என்பதால் மீண்டும் விண்ணப்பித்தேன் என மகேஸ்வரி கூறினார். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு மெசேஜ் வரும். ஆனால் எந்த பதிலும் வரவில்லை என அவர் சொன்னது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள் இரண்டு ஆண்டுகளாக மகேஸ்வரி வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படுவதை கண்டறிந்தனர். இதையடுத்து, உங்கள் வங்கி கணக்கிற்கு இரண்டு ஆண்டுகளாக பணம் போடப்பட்டுள்ளது.

செப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ