கோவை பெண்ணுக்கு உரிமை தொகை ₹25,000 வந்தது எப்படி? | Magalir Urimai Thogai | Wrong Bank Transfer
கோவை, கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, வயது 50. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணபித்தார். ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 2025 ஜூலை 25ல் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மீண்டும் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பதை பார்த்த அதிகாரிகள் உங்களுக்கு ஏற்கனவே பணம் வருது. பேங்க்ல போய் கேட்டு பாருங்க என கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி போன மகேஸ்வரி, இது குறித்து வங்கியில் விசாரித்துள்ளார். அப்போது தான் இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. மகேஸ்வரிக்கு வர வேண்டிய பணம் உத்தரபிரதேச பெண்ணுக்கு சென்றது தெரியவந்தது. பொதுவாக ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு உதவி தொகை வரும்.