பொருளாதாரம் வளர்க்கும் இந்திய கலாசார திருவிழாக்கள் MahaKumb - 2025 |UP| Prayagraj|Rs.2 to 4 lakh Cr
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா கடந்த 13ல் தொடங்கியது. தொடர்ந்து 45 நாட்கள் நடக்கும் கும்ப மேளாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். முதல் நாளிலேயே ஒன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான அமிர்த குளியல் நடந்தது. இதிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர். இதுவரை மூன்றரை கோடி பேர் புனித நீராடியதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 2013ல் நடந்த கும்பமேளாவுக்கு சுமார் 12 கோடி பேரும், 2019ல் நடந்த கும்பமேளாவுக்கு சுமார் 24 கோடி பேரும் புனித நீராடினர். இந்த மகா கும்பமேளாவுக்கு 40 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவர் தோராயமாக 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால்கூட 45 நாளில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வரும் என்று முதல்வர் ஆதித்யநாத் கணக்கிட்டுள்ளார். தனிநபரின் செலவு 10 ஆயிரமாக கூடும் என்றும் அதனால் 4 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வரக்கூடும் என்றும் மாநில அரசு மதிப்பிட்டுள்ளது. இந்த மகா கும்பமேளாவுக்கு உத்தரபிரதேச அரசு 7 ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்கிறது. இதில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாயை மத்திய அரசு அதன் பங்காக அளிக்கிறது. மீதி தொகையை மாநில அரசு ஒதுக்கி இருக்கிறது. கலாச்சாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்று ஆடிட்டரும், உத்தர பிரதேச வளர்ச்சி குழும தலைவருமான பங்கஜ் காந்தி ஜெய்ஸ்வால் கூறி உள்ளார்.