மும்பை கூட்டத்துக்கு ஏக்நாத் வராதது ஏன்
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. இக்கூட்டணியில் உள்ள பாஜ 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளான சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வென்றது. அதிக இடங்களை வென்ற பாஜ, முதல்வர் பதவியில் அமர நினைக்கிறது. ஆனால், ஏற்கனவே முதல்வராக இருந்த ஷிண்டேவுக்கே பதவி தர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கேட்கின்றனர். இதனிடையே சட்டசபைக்கான பதவிக்காலம் முடிந்ததால், முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்தார்.
நவ 30, 2024