/ தினமலர் டிவி
/ பொது
/ மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலையில் நடந்தது என்ன? Bhandara Ordnance factory blast | Maharashtra Blast |
மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலையில் நடந்தது என்ன? Bhandara Ordnance factory blast | Maharashtra Blast |
மகாராஷ்டிர மாநிலம் பண்டாராவில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் இந்த ஆயுத தொழிற்சாலையில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை ஆயுத தொழிற்சாலையில் இருந்த வெடி பொருட்கள் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதில் ஒரு கட்டடமே சுக்குநுாறாக உடைந்து சிதறியது. கட்டடத்தின் உள்ளே இருந்த பொருட்கள் நீண்ட துாரத்திற்கு சிதறின. தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் இருந்து 5 கிமீ துாரம் வரை வெடிச் சத்தம் கேட்டதாக ஊர் மக்கள் கூறினர்.
ஜன 24, 2025