உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நக்சல்வாதத்தின் முதுகெலும்பு உடைந்ததாக மகா. முதல்வர் பெருமிதம் Naxals Grand Wedding at Maharashtra|

நக்சல்வாதத்தின் முதுகெலும்பு உடைந்ததாக மகா. முதல்வர் பெருமிதம் Naxals Grand Wedding at Maharashtra|

மகாராஷ்டிராவில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மத்திய படை மற்றும் மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசாரின் நடவடிக்கையால், நக்சலைட்கள் பலர் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைந்து வருகின்றனர். அந்த வகையில், கட்சிரோலியில் இன்று 12 நக்சலைட்கள் ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களும் அடங்குவர். அவர்கள் பற்றிய தகவல் கொடுப்போருக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேசத்தின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக உள்ள நக்சல் சித்தாந்தத்தை கைவிட்டு தேசிய நீரோடையில் கலக்க விரும்புவதாக சரண் அடைந்த நக்சல்கள் கூறினர். முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் நக்சல்களின் சரண் அடையும் நிகழ்வு நடந்தது. அதே சமயம், ஏற்கனவே சரண் அடைந்து நல்வழிப்பாதையில் பயணிக்கும் 13 முன்னாள் நக்சல்களுக்கு இன்று பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

ஜூன் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ