உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராகுல் வென்ற வயநாடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் Maharshtra election date announcement| Jharkhand ele

ராகுல் வென்ற வயநாடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் Maharshtra election date announcement| Jharkhand ele

ஜார்க்கண்ட், மகராஷ்டிரா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் அறிவித்தார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் ஜார்க்கண்டில், மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 13ல் 43 தொகுதிகளுக்கும், நவம்பர் 20ல் 38 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்கும். ஆட்சியை தக்கவைக்க ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணி பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்க பாஜ பகீரத முயற்சி செய்கிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீதான விமர்சனங்களை முன் வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பாஜவுக்கு வந்திருப்பதால், அவரை வைத்து ஜேஎம்எம் கட்சியின் பழங்குடியின ஓட்டு வங்கியை உடைக்கவும் பாஜ திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ