தமிழக அரசை கண்டித்து தமாகா ஆர்ப்பாட்டம்! Maize | Cess Tax | TMC | Trichy
மக்காச்சோளத்துக்கு தமிழக அரசால் விதிக்கப்பட்ட ஒரு சதவீத செஸ் வரியை ரத்து செய்யக்கோரி தமாகா விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மானாவாரி பயிர் மக்காச்சோளத்துக்கு வரி விதிக்கும் தமிழக அரசை கண்டித்து விவசாய அணியினர் முழக்கங்கள் எழுப்பினர். வரியை ரத்து செய்ய வேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது. படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள மகசூல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. படைப்புழு தாக்குதலை தடுக்க வேளாண் துறை சார்பில் எந்வித மருந்தும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் வரிவிதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என விவசாயிகள் கூறினர். மக்காச்சோளத்துக்கு வரி விதிப்பது விவசாயிகளை விவசாயத்திலிருந்து அகற்றும் நடவடிக்கை என்றும் அவர்கள் கூறினர்.