நாடு முழுதும் மகர சங்கராந்தி, பிஹு, லோஹ்ரி பண்டிகை கோலாகலம் Makara Sankaranti festival | Bihu| Lohr
தமிழகத்தில் நாளை அறுவடை திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதே போல் நாடு முழுதும் இன்று, மகர சங்கராந்தி, பிஹு, லோஹ்ரி, உத்தராயண் என்ற பல பெயர்களில் அறுவடை திருநாள், வசந்த கால உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் காலம் மகர மாதம் என்றும், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும் நாள் மகர சங்கராந்தி என்றும் வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. மகர சங்கராந்தி நாளான இன்று, உபி மாநிலம் பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கங்கையில் புனித நீராடினர். வசந்த காலத்தை வரவேற்கும் திருநாளாகவும் இந்நாள் அமைவதால், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக துவங்கியது. உத்தராயண் என்ற பெயரில் குஜராத்தில் மிகச் சிறப்பாக இன்றைய தினத்தை மக்கள் கொண்டாடினர். பலரும் மைதானங்களுக்கு சென்று, வண்ண வண்ண பட்டங்களை பறக்க விட்டு மகிழ்ந்தனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் லோஹ்ரி என்ற பெயரில் அறுவடைத் திருநாள் இன்று கொண்டாடப்பட்டது. மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடி ஆடிப் பாடி மகிழ்ந்தனர். #MakaraSankaranti| Bihu| Lohri| Uttarayan| Pongal| Makaravilakku|